நேற்று (பெப்ரவரி 27) சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் மார்ச் மாதம் 05ம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க