கடந்த பெப்ரவரி 22ம் திகதி சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் வெளிநாட்டு சிகரெட்டுக்களை கொண்டு வந்த சூரியபாலுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய அழகுக்கலை நிபுணரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 5 இலட்சம் பெறுமதியான “பிளாட்டினம்” வகை சிகரெட்டுகள் அடங்கிய 50 கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு குறித்த சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை(பெப்ரவரி 25) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க