இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருந்த உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் மார்டின் ரைசர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற அரசாங்க அதிகாரிகள், தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகளைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார மீட்சி, நீண்டகால வளர்ச்சிக்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.
அத்தோடு அடுத்த மூன்று மாதங்களில் அரசின் முக்கிய திட்டங்களான கல்வி, கிராம அபிவிருத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வசதிகளுக்கு உலக வங்கி 200 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க உத்தேசித்துள்ளதாகவும்
மார்டின் ரைசர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க