அழகு / ஆரோக்கியம்புதியவை

அமுக்கிரா கிழங்கின் மருத்துவ குணங்கள்

உடலில் ஏற்படக்கூடிய வீக்கங்களை குணப்படுத்த அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து சுடுநீரிட்டு அரைத்து பூசலாம். இதயத்துடிப்பை சீராக்கவும் மூளை செல்களைத் தூண்டி புத்துணர்ச்சியோடு செயற்படவும் அமுக்கிரா கிழங்கை பயன்படுத்தலாம். நரம்புத் தளர்ச்சியை நீக்குகின்றது. தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் அமுக்கிரா கிழங்கை உபயோகிக்கலாம். அத்தோடு இடுப்பு வலியால் அவஸ்தைப்படுபவர்கள் அமுக்கிரா கிழங்கை அரைத்து பசும்பாலிலிட்டு குடிக்கலாம்.

கருத்து தெரிவிக்க