டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை இன்று (டிசம்பர் 12) அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இம்மாதம் 177,311 அஸ்வெசும பயனாளர்கள் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவினை பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க