சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையில் மாற்றம்

அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மாற்றங்களை அறிவித்துள்ளார்.

‘வெளிநாட்டினருக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையில் இனி அதிக அளவில் நிரந்தர குடியுரிமை ‘விசா’ வழங்கப்படும்” என அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் பலர் நிரந்தர குடியுரிமைக்கான விசா பெறுவதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேருக்கு மட்டுமே ‘க்ரீன் கார்ட்’ என்ற நிரந்தர குடியுரிமைக்கான ‘விசா’ வழங்கப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலும் அங்கு ஏற்கனவே நிரந்தர குடியுரிமை பெற்று வசிப்போரின் குடும்பத்தினருக்கே வழங்கப்படுகின்றன.

தகுதியின் அடிப்படையில் 12 சதவீத விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

இந்நிலையிலேயே புதிய குடியேற்ற கொள்கையை அமெரிக்க ஜனாதிபதி  வெளியிட்டார்.

கருத்து தெரிவிக்க