இலங்கையின் நிலையான சமாதானத்துக்கு உதவத் தயார் என்று பிரித்தானியா மீண்டும் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் ஆசியப்பிராந்தியத்துக்கான அமைச்சர் மார்க் பீல்ட் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
பிரி;த்தானியாவும் இலங்கையும் நீண்டகால உறவைக்கொண்ட நாடுகள்.
இதன்காரணமாக எப்போதும் பிரி;த்தானியா, இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்துக்கு உதவி வருகிறது.
இறுதிப்போரின்போது உறவுகளை இழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விடயங்களில், கவனம் செலுத்தப்படவேண்டும்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியா கவலையடைகிறது.
இந்தநிலையில் இலங்கையில் இனங்களுக்கு இடையில் சமாதான சகவாழ்வை கட்டியெழுப்புவதன் மூலம் அனைத்து இனங்களுக்கும் சுபீட்சமான செழிப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தமுடியும் என்றும் பிரித்தானியாவின் ஆசியப்பிராந்தியத்துக்கான அமைச்சர் மார்க் பீல்ட் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க