தற்போது சந்தையில் நிலவுகின்ற அரிசி தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை அத்தியாவசிய உணவு வர்த்தகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதற்கிணங்க சந்தையில் நிலவுகின்ற அரிசி தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் 02 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்திடம் அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை அத்தியாவசிய உணவு வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு பாரியளவான வர்த்தகர்களைப் பாதுகாக்காமல் மக்கள் குறித்து அரசு சிந்திக்க வேண்டுமெனவும் அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை அத்தியாவசிய உணவு வர்த்தகர்கள் சங்கம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க