நேற்று (நவம்பர் 17) ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான சமிடரே எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதற்கிணங்க இன்று (நவம்பர் 18) சமிடரே கப்பலின் தளபதி கமாண்டர் நவோகி கோகா மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
அத்தோடு நாளை (நவம்பர் 19) சமிடரே கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க