முப்பது வருடகால யுத்தம் காரணமாக மூடப்பட்ட பலாலி – அச்சுவேலி வீதி யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களாகியும் திறக்கப்படாததை கருத்திற்கொண்டு கடந்த அக்டோபர் 22ம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் ஆளுநர்களுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கிணங்க இன்று (நவம்பர் 01) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய பலாலி – அச்சுவேலி பிரதான வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க