நேற்று (அக்டோபர் 28) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சியோங் ஹொங்பெங் இருவருக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது எதிர்கால பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான புதிய திட்டங்கள் குறித்தும் கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று மில்லியன் ரூபா நன்கொடையும் போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனம் வழங்கிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க