நேற்று (அக்டோபர் 27) யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதற்கிணங்க கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் நேற்று பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு குறித்த மீனவர்களை எதிர்வரும் நவம்பர் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க