அரைக்கீரையை தினமும் உணவில் சேர்ப்பதனால் உடல் பலவீனம் அகற்றப்பட்டு உடல் பலமடைகின்றது. பிரசவித்த பெண்களுக்கு இக்கீரையை உணவோடு சேர்த்து கொடுத்து வருவதால் உடல் பலமடையும். வாத நோயால் அவஸ்தைப்படுபவர்கள் அரைக்கீரையை உண்பதால் வாத நோயிலிருந்து விடுபடலாம். அத்தோடு தேமல், சொறிசிரங்கிலிருந்து விடுபடவும் அரைக்கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
அரைக்கீரையின் மருத்துவ பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க