புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றி

நேற்று (அக்டோபர் 13) துபாய் மற்றும் சார்ஜாவில் ஆரம்பமாகிய பெண்களுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா அணியை எதிர்த்து அவுஸ்திரேலிய அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்களை பெற்றது.

அதையடுத்து 152 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை பெற்றது.

அதனடிப்படையில் அவுஸ்திரேலிய அணி 09 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

 

கருத்து தெரிவிக்க