புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

03வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

நேற்று (செப்டம்பர் 24) டர்ஹாம் கவுண்டியிலுள்ள ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்ற 03வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்களை பெற்றது.

அதையடுத்து 305 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 37.4 ஓவர்களில் 04 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி 46 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க