இன்று (செப்டம்பர் 10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1050 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுமெனவும் ஒரு கிலோகிராம் பால் மா பொதியொன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு 2585 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க