தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க வெள்ளை சீனி 235 முதல் 264 ரூபாவாகவும் கோதுமை மா 162 முதல் 184 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பருப்பு 270 முதல் 303 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் 400 கிராம் முழு ஆடைப்பால் 910 முதல் 1050 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 180 முதல் 232 ரூபாவாகவும் வெள்ளை முட்டையொன்றின் விலை 40 முதல் 44 வரையிலும் விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க