இலங்கையிலுள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் TikTok அண்மையில் நடத்திய GrowWithTikTok Masterclass என்று பெயரிடப்பட்ட செயலமர்வு மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது.
குறித்த செயலமர்வில் வணிகங்களை வளர்த்துக்கொள்வதற்கு TikTok தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் தமது வணிகங்களின் நாமத்தை எவ்வாறு விளம்பரப்படுத்துவது குறித்தும் இளைஞர்களுடன் இணைந்து எவ்வாறு செயல்படுவது,தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் TikTok இன் தனித்துவமான அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.
மேலும் இச்செயலமர்வில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் உரிமையாளர்கள், சந்தைப்படுத்தல் நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
கருத்து தெரிவிக்க