நேற்று (செப்டம்பர் 02) ஜனாதிபதி ஊடகப் பிரிவில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கிணங்க அரச ஊழியர்களின் சம்பள பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய ஆர். செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் 2025 ஜனவரி 1ம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க