நேற்று (ஓகஸ்ட் 25) ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற விசேட மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனவும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றவேண்டிய நிலை ஏற்படுமாயின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு ரூபாவை வலுப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் மாத்திரமே பொருட்களின் விலைகளை குறைக்க முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க