எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு 35 நாடுகளுக்கு கட்டணமின்றி சுற்றுலா வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், பிரித்தானியா, ஜேர்மன், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஸகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இதாலி, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், தென் கொரியா, கட்டார், ஓமான், பஹரைன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க