சினிமாசினிமாபுதியவை

புஷ்பா பாகம் 02 படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா,சுனில்,பகத் பாசில் நடிப்பில் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் வெளியாகியிருந்தது.

அதனை தொடர்ந்து புஷ்பா பாகம் இரண்டு உருவாகி வரும் நிலையில் அதன் வெளியீட்டு திகதி ஓகஸ்ட்15 என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் படப்பிடிப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டமையால் வெளியீட்டு திகதி பிற்போடப்பட்டது.

அதற்கிணங்க அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் சுகுமார் கலந்துக்கொண்ட மாருதி நகர் சுப்ரமணியம் பட வெளியீட்டு விழாவின் போது புஷ்பா பாகம் 02 எதிர்வரும் டிசம்பர் 06ம் திகதி வெளியிடப்படுமென அல்லு அர்ஜுன் உறுதிப்படுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க