உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவில் நிலநடுக்கம்

நேற்று (ஓகஸ்ட் 18) ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கமானது 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியிருப்பதோடு இந்நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் மிகவும் துடிப்பான எரிமலையான ஷிவேலுச் எரிமலை வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஷிவேலுச் எரிமலை வெடிப்பானது வளிமண்டத்தில் நெருப்பு மற்றும் அதிகப்படியான கரும்புகைகளை உமிழ்ந்து வருவதாகவும் இதன்காரணமாக விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க