சினிமாபுதியவை

100 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் ‘கல்கி’ திரைப்படம்!

நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 27ஆம் திகதி கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியானது. இப்படம் கிட்டத்தட்ட 1300 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று (02) முதல் வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி வரை இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெறும் 100 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் ‘கல்கி’ திரைப்படத்தை கண்டு களிக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க