நேற்று (ஜூலை 26) வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அதற்கிணங்க வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை கொழும்பிற்கு கொண்டு சென்று சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமென திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வடமாகாணத்தில் விளைவிக்கப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு செல்வதில் ஏற்படும் பிரச்சனைகள், போக்குவரத்து வசதியின்மை மற்றும் களஞ்சிய வசதிக்கான செலவுகள் குறித்தும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
கருத்து தெரிவிக்க