நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், ஒரு கிலோ தக்காளியின் சில்லறை விலை 80 ரூபாவாகவும்,ஒரு கிலோ பச்சை மிளகாய் சில்லறை விலை 500 ரூபாவாகவும், போஞ்சி கிலோ ஒன்றின் விலை 1000 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் மற்றும் கரட் சில்லறை விலை 600 ரூபாவாகவும், தேங்காய் ஒன்றின் விலை சில பிரதேசங்களில் 140 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க