புதியவைவணிக செய்திகள்

விவசாய ஏற்றுமதித்துறை வளர்ச்சி குறித்து பி.எல்.ஏ.ஜே.தர்மகீர்த்தி கருத்து

நேற்று (ஜூலை 15) இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி விவசாய ஏற்றுமதித்துறை வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும்போது 2024ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி தெரிவித்தார்.

மேலும் 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு பதிவாகியிருந்த விவசாய ஏற்றுமதி வருமானத்தின் பாதகமான நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் காரணமாகவே குறித்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளதென பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி குறிப்பிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க