இவ்வருடம் 30,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனரென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இவ் வருடம் நாடளாவிய ரீதியில் 30,227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 6,965 நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 3,126 நோயாளர்களும் கண்டியில் 2441 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மேலும் நாடளாவிய ரீதியில் 21 டெங்கு அபாய வலயங்கள அடையாளங்காணப்பட்டுள்ளதோடு இவ்வருடத்தில் டெங்கு காரணமாக இதுவரை 12 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க