இலங்கை

பாலைவன வெட்டுக்கிளிகளின் பாதிப்பு இலங்கைக்கும் ஏற்பட வாய்ப்பு!

வட இந்தியாவில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது பாகிஸ்தானை நோக்கி படையெடுத்துள்ளது. அந்த வகையில் இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம். டபிள்யூ. வீரகோன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளார். எனவே அவற்றை தடுக்க தகுந்த முறையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வகையில், பூச்சியல் வல்லுநர்கள், பயிர் வல்லுநர்கள் மற்றும் பிராந்திய விவசாய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த தகுந்த பூச்சிக்கொள்ளி இரசாயணங்களை கண்டுபிடிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் தங்கள் வயல்களில் வெட்டுக்கிளிகளைக் கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க