இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியால் ரன்தொர உறுமய வீட்டுரிமை வேலைத்திட்டம் முன்னெடுப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ரன்தொர உறுமய வீட்டுரிமை வழங்கலின் ஆரம்ப நிகழ்வானது நேற்று( ஜூலை 10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

இவ்வேலைத்திட்டமானது கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2,50,000 பேருக்கு தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பினை முழுமையாக உரிமைப்படுத்திக்கொள்ளும் முகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க கொழும்பு மாவட்டத்தின் 31 அடுக்குமாடி குடியிருப்புகளிலுள்ள 130 வீடுகளுக்கு ஜனாதிபதியால் உரிமை வழங்கி வைக்கப்பட்டதுடன் சிலருக்கு வீட்டுரிமை பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அத்தோடு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்து வருமானம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததோடு இவ்வாண்டு இறுதிக்குள் 1070 பயனாளர்களுக்கு உரிமைப்பத்திரங்களை வழங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கருத்து தெரிவிக்க