உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பிற்கிணங்க இந்திய- ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா விஜயம் செய்திருந்தார்.

அதற்கிணங்க ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி புடினால் வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் ரஷ்ய ஜனாதிபதி புடினால் நேற்று (ஜூலை 09) வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அத்தோடு இவ்விருதை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு தரப்பு உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய பணிகளுக்காக 2019ம் ஆண்டே விளாடிமிர் புடின் வழங்குவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க