புதியவைவணிக செய்திகள்

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் திட்டம்

முதலாம் வகுப்பு முதல் 11 வகுப்பு வரை உள்ள நாட்டின் 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திட்டம் ஜூலை 12ம் திகதி முதல் மாவட்டமட்டத்தில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபாய் வீதம், 24 மாதங்களுக்கு வழங்கப்பட இருப்பதோடு ஒரு கல்வி வலயத்திலிருந்து 60 மாணவர்களைத் தெரிவு செய்து 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாணவர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுடன் 30,000 ரூபாய் உதவித்தொகை புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் வழங்குவதற்கும், அடுத்த மாதம் முதல் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதம் 6000 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க