புதியவைவணிக செய்திகள்

யாழில் அபராதம் விதிக்கப்பட்ட இரு வெதுப்பகங்கள்

கடந்த மாதம் 12 ஆம் திகதி நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கொக்குவில் பகுதியில் வெதுப்பகங்கள் பரிசோதிக்கப்படதில் இரு வெதுப்பகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை இனங்காணப்பட்டன.

அதற்கிணங்க குறித்த வெதுப்பகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் கடந்த 24ம் திகதி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதுடன் வழக்கினை விசாரித்த நீதவான் ஒரு வெதுப்பகத்தை மூடி சீல்வைக்குமாறும் மற்றைய வெதுப்பகத்தை விரைந்து திருத்தி அமைக்குமாறும் கட்டளை வழங்கியிருந்தார்.
இதன்போது குறித்த வெதுப்பகங்கள் சீல் வைத்து மூடப்பட்டதுடன் வழக்கினை ஜூலை 03ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்திருந்தார்.

அதற்கிணங்க நேற்று(ஜூலை 03) குறித்த வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவான் செ.லெனின்குமார் இரு வெதுப்பக உரிமையாளர்களிற்கும் தலா 80 ஆயிரம் ரூபாய் படி ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அபராதம் அறவிட்டதுடன் திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையால் வெதுப்பகங்களை தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கினார்.

கருத்து தெரிவிக்க