ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலையாக 379 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 344 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் லங்கா சுப்பர் டீசல் 22 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க