நேற்று (ஜூன் 27) நடைபெற்ற டி 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா பலப்பரீட்சை நடத்தியிருந்தது.
அதற்கிணங்க நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்ததையொட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது.
இதையடுத்து 172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103
ரன்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.
அதனடிப்படையில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வெற்றி பெற்றது.
கருத்து தெரிவிக்க