நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியதில் இந்த பாதாம் பருப்பும் ஒன்றாகும். பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும், புற்றுநோயை எதிர்க்கும் விட்டமின்களும் பாதாமில் உள்ளது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
கருத்து தெரிவிக்க