நேற்று (ஜூன் 20) எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்குமிடையே கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகள் மற்றும் ஒத்தாசைகளுக்கும் நன்றி தெரிவித்ததுடன் இலங்கையின் வீடமைப்புத் திட்டங்களுக்கும் சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்கும் இந்திய அரசாங்கம் வழங்கிய பங்களிப்பை என்றும் மறக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க