நேற்று (ஜூன் 16) சுமார் 100 பயணிகளுடன் நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை நோக்கி புறப்பட்ட வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமானத்தின் எஞ்சினில் திடீரென தீ பரவலுக்கு உள்ளாகியிருந்தது.
குறித்த தீ பரவலானது விமானம் வானில் பறந்துக்கொண்டிருக்கும் போது எஞ்சின் மீது பறவைகள் மோதியதால் ஏற்பட்டிருக்கலாமென தகவல் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க குறித்த விமானம் குயின்ஸ்டவுண் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதோடு விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு மாற்று விமானம் மூலம் மெல்போர்ன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க