இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் பெண்ணொருவர் பலி

இன்று காலியிலிருந்து ரம்புக்கனை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மெட்டியகொட வெரல்லான முதுகொட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஹிக்கடுவை பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய கலுபே
என்ற பெண்
உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த கலுபே என்ற பெண் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளாரென பலபிட்டிய வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விபத்து மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளதென தெரியவந்துள்ளதோடு
மேலதிக விசாரணைகளை மெட்டியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க