கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் திகதி அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
அதற்கிணங்க நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டதரணி நிஹால் தல்துவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
அதன்படி இத்துப்பாக்கி சூடு சம்பவமானது அனுராதபுர பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஒத்துழைப்புடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதென நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க