நேற்று (05) அமெரிக்காவின் நியூ யோர்க்கில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரில், அயர்லாந்துடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, 16 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் கரெத் டெலனி 26 (14) ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு 97 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, றோஹித் ஷர்மாவின் 52 (37), றிஷப் பண்டின் ஆட்டமிழக்காத 36 (26) ஓட்டங்களுடன் 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
கருத்து தெரிவிக்க