புதியவைவிளையாட்டு செய்திகள்

தென்னாபிரிக்காவுடனான குழு டி போட்டியில் இலங்கை தோற்றது!

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற, சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரில், தென்னாபிரிக்காவுடனான குழு டி போட்டியில் இலங்கை தோற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் வனிடு ஹசரங்க தமதணி முதலில் துடுப்பெடுத்தாட அறிவித்த நிலையில் அட்னைல் பட்மன், அன்றிச் நொர்கியா, கேஷவ் மஹராஜ் 77 ஓட்டங்களையே பெற்ற நிலையில், பதிலுக்கு 78 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, நுவான் துஷார, தசுன் ஷானக, ஹசரங்கவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கையடைந்தது.

கருத்து தெரிவிக்க