விட்டமின் சி நிறைந்த ஒரேஞ் பழத்தை விட அதன் தோலில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. பிரகாசமான மற்றும் பளபளப்பான சருமத்துக்கு உதவும் அன்டி ஓக்ஸிடன்ட்கள் ஒரேஞ் தோலில் உள்ளன. இந்த ஒரேஞ் தோலை பேஸ்பேக்காக பயன்படுத்துவதால் தெளிவான மற்றும் பிரகாசமான சருமத்தைப் பெற முடியும்.
அந்தவகையில், ஒரு டீஸ்பூன் ஒரேஞ் தோலின் தூள் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் எடுத்து நன்றாகக் கலக்கி அதனை முகத்தில் தடவி பின்னர் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இதனை தொடர்ந்து முகத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் தெளிவான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெறலாம்.
கருத்து தெரிவிக்க