புதியவைவிளையாட்டு செய்திகள்

இந்தியன் பிறீமியர் லீக்கின் பெறுமதி மிக்க வீரராக சுனில் நரைன்!

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தொடரின் 15 போட்டிகளில் விளையாடிய சுனில் நரைன், 14 இனிங்ஸ்களில் 100 பந்துகளுக்கு 180.74 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 488 ஓட்டங்களைப் பெற்று
இவ்வாண்டுத் தொடரின் பெறுமதி மிக்க வீரராக கொல்கத்தா நைட் றைடர்ஸின் சுனில் நரைன் தெரிவாகியுள்ளார்.

அடுத்ததாக பெறுமதி மிக்க வீரர்கள் பட்டியிலில் இரண்டாமிடத்தில் 100 பந்துகளில் 154.69 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 741 ஓட்டங்களை றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் விராட் கோலி பெற்றிருந்தார்.

பெறுமதிக்க வீரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் 100 பந்துகளுக்கு 191.55 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 15 போட்டிகளில் 567 ஓட்டங்களை ட்ரெவிஸ் ஹெட் பெற்றிருந்தார்.

கருத்து தெரிவிக்க