உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மெக்சிகோ தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விபத்து

மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இது மிகவும் சோகமான செய்தி என்று நியூவோ லியோன் மாநிலத்தின் கவர்னர் சாமுவேல் கார்சியா தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் எதிர்வரும் ஜூன் 2ம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிகழ்வின்போது, பலத்த காற்று வீசியதில் மேடை சரிந்து விழுந்துள்ளதோடு இதில் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. யூவோ லியோன் மற்றும் பிற வட மாநிலங்களில் சூறாவளி வீசக்கூடும் என்று மெக்சிகோவின் வானிலை மையம் முன்னதாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க