இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெசாக் வலயத்தினால் போக்குவரத்து தடை

கட்டுநாயக்க – நிட்டம்புவ பிரதான வீதியின் வெயாங்கொடை பிரதேசத்திலேயே அமையப்பெற்ற வெசாக் வலயத்தினால் போக்குவரத்து தடைப்படக்கூடும் என பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.

வெயாங்கொடை பொலிஸ் பிரிவில் 04 வெசாக் வலயங்களும் 07 வெசாக் தோரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு இந்த வெசாக் வலயம் இன்று (23) முதல் 7 நாட்களுக்கு காணப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் இதன்போது கோரியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க