பாலஸ்தீனத்தை தனி நாடாக நோர்வே அங்கீகரிக்கும் என பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.
இதன்போது நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் கூறுகையில், “பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது. தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை பாலஸ்தீனத்துக்கு உள்ளது. பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிப்பதன் மூலம் அரபு அமைதி திட்டத்திற்கு நார்வே ஆதரவு அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பாலஸ்தீனிய அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான திகதியை இன்று( மே 22) அறிவிக்க உள்ள நிலையில், நோர்வேயும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க