இலங்கை மற்றும் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனையான காலி, கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய ஜேர்மன் – இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,6 மாடி மருத்துவமனையில் 640 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆய்வகங்கள், சிறுவர் தீவிர சிகிச்சை பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உள்ளன.
கருத்து தெரிவிக்க