ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வெப்பமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பல பாடசாலைகள் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தாண்டு விடுமுறையின் பின்னரும் முதலாம் தவணை தொடரும் என்பதால், அந்த நேரத்தில் விளையாட்டு போட்டிகளை நடத்த முடியும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுத்தியுள்ளார்.
கருத்து தெரிவிக்க