புதியவைவிளையாட்டு செய்திகள்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் றியல் மட்ரிட் தகுதி!!

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நடைபெற்ற இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த மட்ரிட், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்
போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தி, 2-1 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதேவேளை டென்மார்க் கழகமான கோப்பென்ஹகன் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்றுப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, தமது மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியிலும் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று 6-2 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சிற்றி சார்பாக, மனுவல் அகஞ்சி, ஜூலியன் அல்வரேஸ், எர்லிங்க் பிறோட் ஹலான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கொப்பென்ஹகன் சார்பாகப்
பெறப்பட்ட கோலை மொஹமட் எலியுனுசி பெற்றிருந்தார்.

கருத்து தெரிவிக்க